Search This Blog

Monday, September 28, 2015

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

தமிழர்கள் வீரம் மிகுந்தவர்கள். அக்காலத்தில், பிறந்த குழந்தை இறந்தால் கூட. அதன் மார்பை கீறித் தான் புதைப்பார்கள். அவ்வளவு வீரம் விளைந்த மரபில் படைக்கு பிந்து என்ச் சொல்லியிருப்பார்களா?

பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்தி (முன்னதாக) உணவு பரிமாற வேண்டும்.
படைக்கிறவர்கள் (அதாவது விருந்து படைக்கிறவர்கள்) பிறகு சாப்பிடலாம் என்பதை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து எனக் கூறினார்கள்.
போருக்குச் செல்பவன் நேரமாகவே சாப்பிட்டு விட்டு (சாப்பிட்டவுடன் போருக்குச் சென்றால் களைப்படைந்துவிடுவான்) படை நடத்துபவனுக்கு பின்புலத்திலிருந்து ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்யவும்; தேவைப்படும்போது தேவையான ஆயுதங்களைக கொடுக்கும் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பது இதன் இன்னொரு அர்த்தம்...

1 comment:

  1. https://www.scientificjudgment.com/2019/06/proverbs-and-some-understanding-panthiku-munthu-tamil.html

    ReplyDelete