Search This Blog

Saturday, August 8, 2015

குமரிக்கண்டம்

                           
                  குமரிக்கண்டம் உண்மையா?
     
                       


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்  தமிழர் எனக் காலங்காலமாக மற்றவர் கூறக்கேட்டு நாம் இறுமாந்திருக்கின்றோமேயன்றி அதன் உண்மையை ஒருபோதும் ஆராய விளையவில்லை. தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட.

உலகின் முதல் நாகரிக மாந்தன் எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன் உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும்  கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும்மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று தமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச்சொன்னவனும் தமிழனே என்றால் மிகையாகாது.

அத்தகைய தமிழனின் மூலத்தை தேடினேன், கிடைத்தது நல்ல விடைதான், மூத்தகுடி நம் தமிழ்க்குடி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தமிழன் தோன்றியது குமரிக்கண்டம் தானா என்ற சந்தேகம் எழுந்தது. தீவிர ஆராய்ந்தால் ஒரு தெளிவு கிடைத்தது அதை உங்களுக்கு கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.  முதலில் குமரிக்கண்டம் எனும் கற்பனையை நம்பி நானும் அதனை நிரூபிக்க ஆதாரங்கள் தேடினேன். உண்மை எவ்வளவு நாள் மறைத்திருக்கும். தேடிப்போனால் மறைந்திருப்பதுதானே கிடைக்கும்.


தமிழ்குடியே மூத்தகுடி அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் தமிழரும் தமிழும் தோன்றியது குமரிக்கண்டமா?

காத்திருங்கள் விடையை தக்க சான்றோடு நிறுவுகிறேன்...

No comments:

Post a Comment