ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் அட்லாண்டிஸ் என்ற இரண்டு பெயர்களும் குறிக்கும் சொல் ஆதித்தேயம் என்பதே. இங்கிலாந்து என்ற வார்த்தைக்கு இத்தாலிச்சொல் இங்கில் தெர்ரா (Inghil terra) (அதாவது இங்குள்ள தரை. அங்குள்ள தரை அது ஐரோப்பா கண்டப்பகுதி) அதேபோல அட்லாண்டிஸ் என்பதும் அட்லாந்து - அதி லாந்து - ஆதி லாந்து - ஆதி நிலம்.
அதேபோல ஆஸ்த்ரேலியா என்பதும் ஆதித்தேயம் என்பதிலிருந்தே மருவி இருக்கவேண்டும். காரணம் அறிவியல் பூர்வமானதும் கூட. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுடைய ஜீன்களையும் இந்திய பழங்குடி மக்களின் ஜீன்களையும் ஆய்வுக்குட்படுத்திய போது மிகபொருத்தமாய் இருந்ததாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்வகுடி பெரியவரும், சிறுவர்களும் தமிழர்களைப்போல் இல்லையா?
DNA ஆய்வு முடிவுகள்:
அறிவியல் ஆய்வு முறையில் பிரித்தானிய ஆக்ஸ்போர்ட்டின் DNA பரிசோதனையில் தென்கிழக்காசிய மக்களின் தொன்மை 50,000 வருடங்கள் என்றும் அவர்களே பூர்வ குடி மக்கள் என்றும் , அவர்கள் மத்திய தரைகடல் பகுதியிலிருந்த வெளிவந்த தமிழர்களின் ஒரு கிளையினர் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.காண்க
ஒரு ஜீன் விளக்கப்படம், எவ்வாறு தென்னிந்தியர் ஆஸ்த்ரேலியாவிற்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு: மஞ்சள் நிற ஜீன் குறியீடு ஆத்திரேலிய பழ ங்குடியினருடையது. பச்சைக்குறியீடு தென்னிந்திய தமிழருடையது.
மேலும் உலகின் பல நாட்டு நபர்களை விட தமிழர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
கங்காரு
கங்காரு என்ற பெயர் எப்படி வந்ததுன்னு பலருக்கும் தெரியும்.
ஆஸ்திரேலியா வந்திறங்கிய ஒரு ஐரோப்பியர் அதிசயமாகத்தெரிந்த இந்த விலங்கினத்தை முதன்முறை பார்த்து பழங்குடிகளிடம் இதன் பெயரென்ன எனக்கேட்க, அவர் என்ன கேட்டார் என்று புரியாத அம்மக்களில் ஒருவர் கேட்டது புரியவில்லை என்று அவர்கள் மொழியில் சொன்னதையே அவ்விலங்கின் பெயராய் புரிந்துகொண்டு கங்காரு என்பதையே அவ்விலங்கின் பெயராக்கினார் என்பது வழக்கு.
உண்மையில் அந்த விலங்குக்கு பெயர் வச்சவன் தமிழன். அந்த விலங்கின் பெயர் ஒரு தமிழ்பெயர். அது மார்சூப்பி. கூகுள் போய் கங்காரு என்று தேடினால் அந்த விலங்கின் உட்குழு பெயர்மார்சூப்பியல் என்று வரும்.
Scientific classification | |
---|---|
Kingdom: | Animalia |
Phylum: | Chordata |
Class: | Mammalia |
Infraclass: | Marsupialia |
Order: | Diprotodontia |
Family: | Macropodidae |
Genus: | Macropus |
Subgenus: | Macropus and Osphranter |
மார்சூப்பியல் சென்று தேடினால் அது ஓரியண்டல் என்று முடித்து கொள்கிறார்கள்.
ஏன் அந்த பெயர் ?
ஏன் அந்த பெயர் ?
எந்த விலங்கினத்தின் குட்டியும் அதன் தாயை விட பொதுவாக பத்தில் ஒரு மடங்கு அல்லதுபதினைந்தில் ஒரு மடங்கு சின்னதாக இருக்கும், மனிதன் உட்பட.
ஆனால் இந்த கங்காரு மட்டும் பிறக்கும் பொது தாயை விட 500 மடங்கு சிறியது.
தாய்க் கங்காருவின் வயிற்றுப்பையுள் செல்லும் குட்டி வெளியே வராது. வர முடியாது.ஏறக்குறைய 4 வருடங்கள் தாயின் வயிற்றுப்பைக்குள்தான் அதற்கு வாழ்க்கை. அதனாலேயேதமிழர்கள் அந்த விலங்குக்கு வைத்த பெயர் மார்சூப்பி.
சூப்பி என்ற தமிழ்ச்சொல் இன்று தென் மாவட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதைப்போல் சங்க இலக்கியங்களில் பல தொன்மையான தமிழ்ச் சொற்கள் இன்று தென் கரை மாவட்டங்களில் புழக்கத்தில் இருப்பதை வேறொரு பதிவில் காணலாம்.